Thursday 17 January 2013

LOVE காதல்






True Love Images

happy valentine`s day

" புதிதாக காதலித்த போது
பூக்களில் கவிதை தெரிந்தது.....

புரிந்து காதலித்த போது...
பூவையின் மனம் புரிந்தது....

வாடியது பூக்கள் யாவும்
வாடவில்லை காதல் நாளும்

வாழ்வை ரசிக்க காதலிக்கிறேன்
வசந்தம் நுகர்ந்தே முருவலிக்கிறேன்

எனக்குள் நானே சிரித்துக் கொள்கிறேன்
ஏனோ என்னை நான் மறக்கிறேன்....!"

 

Valentine Card

  Surya First Look Sameera Reddy Cute Love scene(Vaaranam Aayiram) 

 

"I Love You" in 165+ Languages :-

Afghani: Dos-tit Darome
Afrikaans:
Ek is lief vir jou [to friends]
Ek het jou lief [to a lover and family members, but especially to a lover]
Albanian: Te dua
Aleut: Txin Yaktakuq
Amharic: Afekrishalehou
Arabic:
Ana Behibak [to a male]
Ana Behibek [to a female]
Armenian:
kezi chat ge sirem [western Armenian)]
yes kez sirum em [eastern Armenian]
yes kez shat em siroom
Aromanian: Ti voi
Avallaen: vüväloiek dü quuo
Azerbaijanian: Men seni severam
Bambara: M'bi fe
Bangla: Aamee tuma ke bhalo aashi
Basque: Maite zaitut.
Belarusian: Ya tabe kahayu
Bengali: ami tumake bhalo bashi
Berber: Lakh tirikh
Bhojpuri: ham tahara se pyar karila
Bicol: Namumutan ta ka
Bisaya: Nahigugma ko nimo
Bosnian: volim te; ja te volim
Breton: Karout a ran ac'hanout / Da garout a ran / Me az kar
Bulgarian: Obicham te
Burmese: Nga nint ko chit dae; Nga nint go chit tel
Cambodian:
kh_nhaum soro_lahn nhee_ah
Bon sro lanh oon
Cantonese: Ngo oi ney
Catalan: T'estimo
Cebuano: Gi Gugma Kita
Chamorro: Hu Guiya Hao
Chanchal: main Tere bina main ji nahi pauga
Cherokee: Tsi ge yu i
Cheyenne: Ne mohotatse
ChiBemba: Nalikutemwa
Chichewa: Ndimakukonda
Chinese: Wo ai ni
Cimbrian: Ich liibe-dich
Corsican: Ti tengu caru [to male]
Cornish: My a’th kar
Croatian: Volim te; Ja te volim
Czech: miluji te
Danish: Jeg elsker dig
Dhivehi: Aharen Kalaa Dhekeh Loabivey
Dothraki: Yer jalan atthirari anni ("You are the moon of my life.")
My thanks to Mohan Kumar (Docmo) for adding this translation.
Dutch: Ik hou van jou
Efik: Mmema fi
Elvish: Amin mela lle
English: I love you
Esperanto: Mi amas vin
Estonian: Ma armastan sind
Ethiopian: Afgreki'
Faroese: Eg elski teg
Fijian: Au domoni iko / Au lomani iko
Finnish: Mina rakastan sinua
Flemish: ik zie je graag; ik hou van je
French: Je t'aime
Frisian: Ik bin fereale op dy; Ik hâld fan dy
Friulian: Ti vuei ben
Galician: Ámote
Georgian: Me shen mikvarkhar
German: Ich liebe dich
Greek: S'agapo
Greenlandic: Asavakkit
Guarani: Rojhayhû
Gujurati: Tane Prem Karoo Choo
Haitian Creole: Mwen renmen w
Haoussa: Ina sonki
Hawaiian: aloha wau i'a o'e
Hebrew:
ani ohev otach [male to female]
ani ohevet otcha [female to male]
Hiligaynon:
Palangga ko ikaw
Guina higugma ko ikaw
Hindi: Hum Tumhe Pyar Karte hae
Hmong: Kuv Hlub Koj
Hungarian: Szeretlek (I love you.)
Én is szeretlek téged (I love you, too.)
Hokkien: Gwa ai di
Hopi: Nu' umi unangwa'ta
Iban: Aku sayau nuan?
Icelandic: Ég elska þig
Ilocano: Ayayatenka / Ipatpategka / Ikarkarayoka
Ilonggo: Palangga ko ikaw
Indonesian: Saya cinta padamu
Inuit: Negligevapse
Iranian (Persian): Tora dust midaram
Irish Gaelic: Ta gra agam ort
Italian: Ti amo
Japanese: o ai shiteru
Javanese: kulo tresno panjenengan
Kannada: Nanu nimmege preti maditi idini
Kapampangan: Kaluguran daka
Kazakh: Men seny jaksy kuremyn
Khmer:
bong sralun on [male to female]
on sralun bong [female to male]
Kirundi: Ndagukunda
Kiswahili: Nakupenda
Klingon: qamuSHa
My thanks to Mohan Kumar (Docmo) for adding this translation.
Konkani: Tu magel moga cho
Korean: Tangsinul sarang ha yo
Kurdish: Ji te hez dikîm
Latin: Te amo
Latvian: Es tevi miilu
Lebanese: Bahibak
Lithuanian: Tave myliu
Low Saxon: Ik hou van di
Luxembourgeois: Ech hunn dech gär; Ech si frou mat dir
Malay: Saya cintakan mu / Aku cinta padamu
Malayalam:Njan Ninne Premikunnu
Maltese: Inħobbok / Inħobbok hafna / Jien inħobbek
Maori: Kei te aroha au ki a koe
Marathi: Me tula prem karto
Mohawk: Kanbhik
Mongolian: Bi chamd khairtai
Moroccan: Ana moajaba bik
Nahuatl: Ni mits neki
Navajo:Ayor anosh'ni
Ndebele: Ngiyakuthanda
Nepali: Ma timlai maya/prem garchu
Norwegian:
Jeg elsker deg [Bokmaal]
Eg elskar deg [Nynorsk)]
Occitan:
T’aimi
T’estimi
Palauan: A Kultoir er Kau
Pangasinan: Inaru Taka
Papiamento: Mi ta stimabo
Pashto: za la ta sara meena kawom
Persian (Iranian): Doo-set daaram
Polish: Kocham Ciebie
Portuguese: Amo-te, Eu te amo, Eu gosto de você, Eu amo você
Portuguese (Brazilian): eu te amo
Punjabi: mẽ tenū̃ piār kardā hā̃
Quechua: canda munani (love to you)
My thanks to Joseph De Cross for this translation.
Romanian: Te iubesc
Russian: Ya tebya liubliu
Samoan: Ou te alofa ia te oe
Sardinian: Deo t'amo / Deu t'amu
Scottish Gaelic: Tha gra\dh agam ort
Serbo-Croatian: Volim te
Sesotho: Ke a o rata
Setswana: Ke a go rata
Shona: Ndinokuda
Sindhi: Maa tokhe pyar kendo ahyan
Sioux: Techihhila
Slovak: Lu`bim ta
Slovenian: Ljubim te
Somali: Waan ku jecelahay
Spanish: Te quiero; Te amo
Swahili: Ninapenda wewe
Swedish: Jag alskar dig
Swiss-German: Ich lieb Di
Tagalog (Filipino): Mahal kita
Tahitian: Ua Here Vau Ia Oe
Taiwanese: Wa ga ei li
Tamil: Nan unnai kathalikaraen
Tatar: Min sini yaratam
Telegu: Nenu ninnu premistunnanu
Tetum: Hau hadomi O
Thai:
Chan rak khun [to male]
Phom rak khun [to female]
Timorese: Hau hadomi
Tongan: u ou 'ofa 'ia koe
Tswana: Ke a go rata
Turkish: Seni Seviyorum
Ukrainian: Ya tebe kahayu
Urdu: mai aap say pyaar karta hoo
Uzbek: Men seni sevaman
Vietnamese:
Anh ye^u em [to female]
Em ye^u anh [to male]
Walloon: Dji t'veû vol'tî
Welsh: Rwy'n dy garu di
Xhosa: Ndiya kuthanda
Xitsonga: Ndza ku rhandza
Yiddish: Ikh hob dikh
Yoruba: Mo ni fe
Zulu: Ngiyakuthanda

 Why do we celebrate Valentine's Day?

We celebrate Valentine's Day, because until 1969, it was one of the many Saint's Days observed by the Catholic Church. It was dedicated to the patron saint of romantic causes, St. Valentine.

Although it was removed from the Church's calendar in 1969, the religious meaning coupled with Valentine's Day's roots in Roman paganism have allowed it to continue as a holiday for everyone.

Early Christians saw Valentine's Day as a way to honor St. Valentine, of whom there were actually three. The Catholic Church recognizes three saints by that name, all who were martyred on February 14.


The St. Valentine the day is named for was, most likely, a priest in the 3rd century who performed secret marriages when the Roman Emperor Claudius II thought single soldiers were more likely to enlist in the army. That St. Valentine was imprisoned and executed on February 4, 270. It is believed he was responsible for giving the jailer's blind daughter back her eyesight, and before his execution, he sent herss a note saying, "From your Valentine." The phrase is still widely used on valentines today.
It wasn't until 1537 that St. Valentine's day was declared an official holiday. England's King Henry VIII, known for his ways of disposing of wives, declared February 14th a holiday. It was another century and a half before religious devotional cards became non-religious cards to reflect the change in the holiday.


In 496 A.D., February 14, was declared in the name of St. Valentine by Pope Gelasius. It remained a Church holiday until 1969, when Pope Paul VI took it from the calender.

On February 14, the ancient Romans celebrated the Feast of Lupercalia in honor of Juno, the queen of the Roman gods and goddesses. Juno was also the goddess of womesn and marriage so honoring her was thought to be a fertility rite.

At the feast held the next day, the women would write love letters and stick them in a large urn. The men would pick a letter from the urn and for the next year, pursue the woman who wrote the chosen letter. This custom lasted until the 1700s when people decided their beloveds should be chosen by sight, not luck.

VTV Scene- Karthik Meets Jessie  

 

History Of Red Roses

Roses in Ancient Historic Period :-


The Romans outdid the Greeks when Nero, the hedonistic emperor, 1st century AD, dumped tons of rose petals on his dinner guests.
   
Cleopatra had her living quarters filled with the petals of roses so that when Marc Antony met her, he would long remember her for such opulence and be reminded of her every time he smelt a rose. Her scheme worked for him. Such is the power of roses.

Not only in Christian literature, also in ancient Confucian and Buddhist religious documents we find references to the rose.
   
The Romans cultivated this great beauty and named it Rosa Gallica. Newly married couples were often crowned with roses.

" Roman high society women used petals much like currency believing that they could banish wrinkles if used in poultices. Rose petals were often dropped in wine because it was thought that the essence of rose would stave off drunkenness and victorious armies would return to be showered with rose petals from the civilians that crowded the balconies above the streets."

Roses in Medieval Period :-

    The first known paintings of a rose are actually frescoes. The earliest example was discovered in Crete around 1600 B.C.
   
The apothecary rose, R. Gallica Officinalis, first recorded in the 13th century, was the foundation of a large industry near the city of Provins, France. Turned into jellies, powders and oils, this rose was believed to cure a multitude of illnesses.

"In ancient Mesopotamia, Sargon I, King of the Akkadians (2684-2630 B.C.) brought "vines, figs and rose trees" from a military expedition beyond the River Tigris."

War of Roses :-


The war started when the nobles of York rose against Henry VI of Lancaster who was a feeble ruler. Edward IV, of York, replaced Henry as king. Later, Henry again became king, but lost his crown once more to Edward after the battle of Tewkesbury in 1471. The Yorkists held power until Richard III lost his throne to the Lancastrian Henry Tudor. Henry Tudor married into the House of York. This personal union ended the conflict, and a new famous dynasty, the Tudors, emerged.

The War of the Roses was a civil war in England that lasted from 1455-1487. The House of York adopted a white rose (R. alba), the House of Lancaster decided to take a red rose (R. Gallica). The winner of this war, Tudor Henry VII, merged his Lancastrian rose with the red rose of his York bride and thus created the Tudor Rose, the Rose of England.

 

Roses in Modern Period:-

The era of modern roses was established with the introduction of the first hybrid tea rose, "La France" by the French breeder, Guillot in 1867 . This variety was considered unique for a number of important horticultural reasons-
1) Hybrid tea rose possessed the general habit of a hybrid perpetual rose.
2) The elegant shaped buds of hybrid tea rose.
3) Free flowering character of a tea rose.
By the late 20th century, more than 10,000 hybrid tea roses were bred with great success. Introduction of 'La France' heralded the era of modern roses.

The renewed interest in the garden rose came with the 19th century empress - Josephine, wife of Napoleon Bonaparte. This ambitious woman's dream was to establish a rose garden in Malmaison containing a collection of all the roses of the world.

Some Legends on Roses:-


In Greek mythology, Aphrodite, Goddess of Love, is said to have created the rose which arose from her tears and the blood of her lover Adonis.

    The Romans, turning Aphrodite into their goddess Venus, also adopted the rose: it became the symbol of love and beauty. Cupid, offering a rose when trying to bribe the God of Silence to hush Venus's amorous escapades, made the flower into a symbol for secrecy: Roman dining room ceilings were decorated with roses, reminding guests to keep secret what had been said during dinner. Sub Rosa, under the rose, up to this day means "confidentially".

    The world's oldest living rose bush is thought to be 1000 years old. Today, it continues to bloom on the wall of the Hildesheim Cathedral in Germany.

    In Ancient Greek mythology, when Venus´ son Cupid was stung by a bee he accidentally shot arrows into a rose garden. It was believed to be the sting of the arrows that caused the roses to grow thorns. When Venus walked through the garden and pricked her foot on a thorn, it was the droplets of her blood which turned the roses red.

    Legend has it that during the Roman Empire there was an incredibly beautiful maiden named Rhodanthe. Her beauty drew many suitors who pursued her relentlessly. Exhausted by their pursuit, Rhodanthe was forced to take refuge in the temple of her friend Diana. Unfortunately, Diana was of a jealous nature and when the suitors broke down her temple gates to get near the beloved Rhodanthe, she became furious. Enraged, Diana turned Rhodanthe into a rose and her suitors into thorns.

    In an Arabic legend, all roses were originally white until one night when the nightingale met a beautiful white rose and fell in love. At this stage nightingales were not known for their melodious song they merely croaked and chirped like any other bird. But now the nightingale's love was so intense that he was inspired to sing for the first time. Eventually his love was such that he pressed himself to the flower and the thorns pierced his heart, colouring the rose red forever.


 

 

 Why Red Roses Signifies with Love :-

It is true that red roses to impress beautiful and romantic love. That flower is suitable to be given to a lover as the love tent, the red color of the roses. Other colors may have other meanings. Whether you give your loved one a single red roses are romantic. Cause i think why red roses signifies with love.


The word "rose" means red or pink and is derived from different languages, such as Greek and Latin. In ancient times, roses were also considered a vital ingredient in the making of love potions. Whether they ever worked or not we don't know. The Greek goddess of love Aphrodite was also associated with the rose and there is a story about the creation of the rose in ancient Greek mythology where Chloris, the goddess of flowers created the rose by giving life to a nymph. Aphrodite gave her beauty, Dionysus, nectar and the three Graces, charm, brightness and joy.

Roses have become a universal symbol and been represented over time in numerous classical paintings, poetry and music. Roses have inspired many, across various cultures around the world to this day. While the rose has inspired many, it has over time emerged as the symbol of romance and thus very popular on Valentine's Day.


Roses are the ultimate symbol of love and saying "I love you". According to some traditions. The number of roses apparently, also has meaning:

  1.     No roses means "you're sleeping on the sofa"
  2.     Single rose means an "only love"
  3.     Lilac rose means, "love at first sight"
  4.     Dozen roses means "true love"
  5.     99 roses means "forever love"
  6.     100 roses means "marry me"



In pre-Victorian times, much of the population was illiterate. So instead of writing love letters, they sent flowers instead as a way to express their feelings. This continued on into the Victorian era and became a clever way for a young lady's admirer to express his feelings towards her. Even today, roses are considered to signify love, passion, romance and attraction.

Since roses and other flowers were considered to represent love, and over time the red rose came to signify love and romance (people think of the human heart as red in colour and the heart also signifies love), thus the tradition of sending your "loved one" or even just the person you are secretly infatuated with a rose or a number of roses, budget depending.

There are distinct varieties of roses, and many different colours such as yellow, white, orange, pink and mauve. There are even different varieties of red roses, such as Black Magic, which is a crimson rose, Black Baccara which is almost black in colour with velvety soft petals and the Magnum, a tightly shaped rose bud that is bright red.

 

உனக்காக இன்று 


"படுத்ததும் உறக்கம் வரும்
கனவுகள் பற்றி தெரியாது

காதலிக்கும் முன்பு .....

உறக்கமில்லை

கனவுகளோடு விழித்திருக்கிறேன்

காதலால்

உனக்காக இன்று.... "

  happy valentines day

உலகின் மிக பழைய காதல் கடிதம்

  •      
  •  

மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதே காதலும் தோன்றி விட்டது. ஏனெனில் மனிதனுக்கு இயல்பாக உள்ள உணர்ச்சிகள் இரண்டு. ஒன்று காதல். மற்றது வீரம். ஆகவே காதலை வெளிப்படுத்துகின்ற மார்க்கங்களும் அக்காலத்திலேயே தோற்றம் பெற்று இருக்க வேண்டும் என்பது வெளிப்படை.
ஒருவரோடு இன்னொருவருக்கு ஏற்படுவதாய் உள்ள காதலை வெளிப்படுத்த வல்ல சிறந்த ஊடகம் கடிதம்தான்.
அப்படியானால் காதல் கடிதமும் தொன்று தொட்டு பாவனையில் இருந்து வந்திருக்க வேண்டும்தானே?
உலகில் காதல் கடிதத்தின் பாவனை எப்போது ஆரம்பமானது? என்பதை எம்மால் எடுத்துச் சொல்ல முடியாதுதான். ஆனால் அகழ்வாராய்ச்சியாளர்கள் இது வரை கண்டுபிடித்தவற்றுக்குள் மிகவும் காலத்தால் முந்தியதாக உள்ள காதல் கடிதம் பற்றியே நாம் இங்கு பேசுகின்றோம்.

துருக்கியில் உள்ள இஸ்தான்பூல் தொல்பொருள் மியூசியத்தில் இக்காதல் கடிதம் இன்றும் உள்ளது. ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் இருந்து 150 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள Niffer Valley என்கிற இடத்தில் கி.மு 2200களில் இக்கடிதம் எழுதப்பட்டு இருக்கின்றது. இதை அறிகின்றபோது பலரும் ஆச்சரியப்படத்தான் செய்கின்றார்கள்.

The first love letter of the world
அந்தக் காலங்களில் கடதாசிகளில் மக்கள் எழுதி இருக்கவில்லை. இக்கடிதம் மிகப் பழைமையான காலத்து பேஷனை கொண்டு இருக்கின்றது. ஆயினும் மிகவும் அருமையான வாசகங்கள் இதில் காணப்படுகின்றன. கல்லால் செதுக்கப்பட்ட தட்டு ஒன்றின் மேல் கடிதம் எழுதப்பட்டு இருக்கின்றது.
Philadelphia பல்கலைக்கழக பேராசிரியரான Noah Kramer அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது 1889 ஆம் ஆண்டு இக்கடிதத்தை கண்டு பிடித்தார். ஆயினும் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தவற்றை வாசித்து விளங்கிக் கொள்கின்றமைக்கு 58 வருடங்கள் எடுத்து இருக்கின்றன.

சுமேரிய மொழியில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்கள் பகீரத முயற்சிகளை தொடர்ந்து இக்கடிதத்தை வாசித்து விளங்கிக் கொண்டார்கள். Muazzez Longso, Hatice ஆகிய இரு நிபுணர்கள் இக்கடிதத்தை முழுமையாக மொழிபெயர்த்தனர். இக்கடிதத்தின் பூர்வீகத்தை கண்டுபிடித்தனர். இது கவிதை வடிவிலான காதல் கடிதம்.

இக்காதல் கடிதம் சுமேரியாவைச் சேர்ந்த உயர்நிலை பாதிரியான இன்னானா என்பவரால் எழுதப்பட்டு இருக்கின்றது. முதல் இரவின்போது கணவனுக்காக காதல் கவிதை ஒன்றை மனைவி எழுதுகின்ற வழக்கம் அக்காலத்தில் அங்கு இருந்து வந்து இருக்கின்றது. இந்நிலையில் கணவனுக்காக இக்கவிதையை முதல் இரவில் எழுதி இருக்கின்றார். இக்காதல் கடித கவிதை அற்புதமான அர்த்தங்களை கொண்டு இருக்கின்றது

http://summafm.com/new_web/new/wp-content/uploads/2012/11/loveletter-small1-362x600.jpg 

 "உன் விழிகளுக்குள் எத்தனை முறை
பிறந்து மீண்டும் சாவேனோ
புரியாது கடக்கும் நாட்கள்
சுவாசம் இல்லா சொர்க்கம் ..
இதழ் புன்னகையால் உன்  
சம்மதம் சொல்லடி பெண் பூவே
 இது வரை நீ எண்ணிடா புது
 உணர்வை அன்பால் உணர செய்வேன்;
 
நம்பிக்கை கொண்டு என்னோடு வா  மெல்லினமே
மனித இரைச்சல் ஏதும் இல்லா இடந்தனில்  
மாசற்ற  அன்பு, பொழுதெங்கும் வீசும் காலை தென்றல்,
 நீ , உனக்காய் நான், நமக்காய் அந்தி மாலை வெண்ணிலா
 இவை கொண்டு தனி கிரகம் செய்வேன் நாம் வாழ;
 
 உன் சுவாச நொடிகளில் என் அன்பால்
 உன்னை நிறைத்து எனை தொலைப்பேன்
 தொலைந்தே உன்னில் வசிப்பேன்
  சாகும் வேளை  உன் தோளில்
  கடைசி துயில் கொள்வேனடி 
  என் காதலின் தாய்மையே.."



A Fantastic Love Scene From Tamil Movie Goa 



 True Love Images

"இயற்கை பிடித்திருக்கிறது
அதில் செயற்கை பிடிக்கவில்லை!
நிலவு பிடித்திருக்கிறது
அதன் கண்ணாமூச்சி ஆட்டம் பிடிக்கவில்லை!
நட்சத்திரம் பிடித்திருக்கிறது
அதன் தூறம் பிடிக்கவில்லை!
மழை பிடித்திருக்கிறது
அதில் நனைய பிடிக்கவில்லை!
காதல் பிடித்திருக்கிறது
அதன் லீலை பிடிக்கவில்லை!
நட்பு பிடித்திருக்கிறது
அதன் தெளரகம் பிடிக்கவில்லை!

தனிமை பிடித்திருக்கிறது!
அதில் கனவு பிடித்திருக்கிறது!
கனவில் கற்பனை பிடித்திருக்கிறது
அதில் காதல் பிடித்திருக்கிறது!
காதலில் என்னை பிடித்திருக்கிறது!!!!!!"

 

 

காதலை எப்படி சொல்வது?

 
Happy Propose Day

மனம் நிறைய காதல் இருந்தும் அதை எப்படிச் சொல்வதென்று புரியவில்லையா? `சொல்லத்தான் நினைக்கிறேன்... சொல்லாமல் தவிக்கிறேன்... காதல் சுகமானது' என்று நீங்களாகவே பாடிக் கொண்டிருக்காதீர்கள்.

இதோ இப்படிச் சொல்லிப் பாருங்களேன்...
* காதலைச் சொல்லச் செல்லும் முன்பாக சிறிதாக ஒத்திகை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக உங்கள் காதலியைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் காதலை சொல்லும் வேளையில் அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
* அவர், இயல்பான குணத்தில் இருக்கும் சாதாரண வேளைதான் உங்கள் அன்பை காதலாக மாற்றும் தருணமாகும். எனவே அவர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலைச் சொல்லத் தொடங்குங்கள்.
* காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். எந்தவித குணமுடைய பெண்ணாக இருந்தாலும் தனிமையில் சாந்தமாக இருப்பார்கள்.
* `நான் உங்களை காதலிக்கிறேன்' என்று நேரடியாக விஷயத்தை ஆரம்பிக்கக்கூடாது. எனக்கு உங்களைப் பிடிக்கும், உங்கள் சிரிப்பு பிடித்திருக்கிறது, பல சிந்தனைகளில் நமது கருத்து ஒத்துப்போகிறது, உங்களது உதவும் குணம், எல்லோர் மீதும் பாசமாக இருப்பது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியும் என்று விரும்புகிறேன் என்று கூறி பிறகு `நான் உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்லலாம்.
* கையில் பூவுடன் செல்லுங்கள். அவள் நிற்கும்போது நீங்கள் காலை மண்டியிட்டு நின்று அவளது முகம் பார்த்து கைகளை நீட்டி பூவைக் கொடுத்து `ஐ லவ் மை ஸ்வீட் பேபி' என்று சொல்லலாம். இப்படிச் சொல்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். நாணம் மிகுந்த பெண், உள்ளார்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் பெண்களிடம் இந்த முறையில் காதலைச் சொல்லக்கூடாது. அவர்கள் திகைப்படைந்துவிடுவார்கள்.

happy valentines day

* வார்த்தைகளை `வளவள'வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக்கூடாது. பெண்கள் சாமர்த்தியசாலிகள். உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். இழுத்து இழுத்து பேசினால் விரும்ப மாட்டார்கள்.
* எல்லாப் பெண்களுக்கும் பூக்களைப் பிடிக்கும். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு (பொக்கே) கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. `உன்னோடு மட்டுமே இனி என் வாழ்வு கழிவதை விரும்புகிறேன்' என்று உளமாறக் கூறுங்கள். அவருக்கும் உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.
* பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது ராணுவ வீரன் போலவோ, இன்டர்விïவில் மேலதிகாரி முன்பு நிற்பதுபோலவோ விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயா னவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, `அன்பே உன்னை நேசிக்கிறேன்' என்று சொல்லுங்கள். சொல்லும்போது உங்கள் மனம் உருகி கண்கள் செருகினால் கூட தவறில்லை. முழுக்க அவருக்கு பாதுகாப்பு அளிப் பது போலவும், உங்கள் வாழ்வு முழுவதும் அவரை சார்ந்திருப்பதுபோலவும் உங்கள் பேச்சும், உடல் அசைவுகளும் இருக்க வேண்டும். அவரைச் சுற்றி வந்து பேசுவது அதிகப்படியான காதலைக் குறிக்கும். ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண் கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை.
* புகழ்ச்சி எல்லோரையும் கவரக்கூடியதாகும். பெண்களுக்கு அவர்களின் அழகை வர்ணிப்பது மிகவும் பிடிக்கும்.

VTV Scene- Karthik Meets Jessie


"நாம் தினம் விழிகளால் பேசவில்லை
இருந்தும் தினம் என் விழியில்
எப்படியடி விழுந்தாய் ?

நாம் தினம் சந்திக்கவில்லை
இருந்தும் தினம் என் கனவில்
எப்படியடி வந்தாய் ?

நாம் தினம் பேசவில்லை
இருந்தும் தினம் என் வார்த்தையில்
எப்படியடி விழுந்தாய் ?

எதுவுமே புரியாமல் வந்த காதல்
இன்று உன்னோடு மட்டும் வாழ
துடிக்கும் இதயத்தை
சாகடிக்காமல்
உன் காதலால் என் இதயத்தை
வண்ணமாக்கு"

happy valentines day

காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில்தான் வெற்றி கிடைக்கிறது. சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல் ஆகிவிடும். காதலை சொல்லும் வழிமுறைகள் குறித்து சில யோசனைகள் : 
மனமறிந்து சொல்லுங்கள் :-
         நீங்கள் விரும்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். காதலை வெளிப்படுத்தும் தருணம் எத்தகையது என்பதையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் முதலாக கூறும் முன்பு ஒத்திகை அவசியம். இல்லை என்றால் முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும். 
ஆர்வமுடன் வெளிப்படுத்துங்கள் :-
        எந்த தருணத்தில் காதலை வெளிப்படுத்துகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது. காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலை இயல்பாக வெளிப்படுத்துங்கள் .
         புகழுக்கு மயங்காதவர்கள் என்று யாரும் கிடையாது. மனம் திறந்து பாராட்டுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் புகழுரையை கேட்கவே நீங்கள் விரும்பும் நபர் உங்களிடம் பேசவருவார்கள்
 நேசத்தை வெளிப்படுத்துங்கள் :-
         காதலிப்பதை நேரடியாக தெரிவிப்பதை விட ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு செய்கையிலும் முதலில் புரிய வைக்கலாம். காதலிக்கும் நபருக்கு பிடித்த உடைகளை அணிவது, அவருக்கு பிடித்த விசயங்களை செய்வது போன்றவை அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம். 
வார்த்தைகளை 'வளவள"வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக் கூடாது. உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.
Man hiding a bouquet of flowers from his girlfriend Stock Photo - 11461743
 பூக்களை நேசிப்பவர்கள் :-
         ஆணோ, பெண்ணோ அனைவருமே பூக்களை நேசிப்பவர்கள்தான். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. எதிராளிக்கு உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.
         பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயானவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, 'அன்பே உன்னை நேசிக்கிறேன்" என்று சொல்லுங்கள்.
ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண்கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை!

"சொல்லிவிடு உன் காதலை
நீ சூடியிருக்கும் மல்லிகைப்பூ
வாடும் முன் உன் காதலை
என்னிடம் சொல்லிவிடு
இல்லையென்றால் ?...உன்
கூந்தலில் இருக்கும் மல்லிகைப்பூ
மலர்ந்து வாடும் முன்பே ............
என் இதயத்துடிப்பு நின்றுவிடும் ..........."

       
     

"போகும் வழி எல்லாம் பூவாய் மாற்றினாய்,
என் நெஞ்சிலோ முள்ளாய் குத்தினாய்,
முள் குத்தி குருதி வரவில்லை,
என் நெஞ்சில் காதல் வந்தது."

 

காதல் அழியாமல் இருக்க சில சூப்பர் டிப்ஸ்... 

காதல் என்பது ஒரு வகையான உணர்வு. அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது. காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பாசம், அன்பை

குறிக்கும். அந்த காதல் (அன்பு) நட்பாகவும் இருக்கலாம், சகோதரத்துவம் ஆகவும் இருக்கலாம். இன்று புத்தகங்கள், திரைப்படம் மற்றும் இணையத்தில் காதல் கருத்துக்கள் பல வழிகளில் காட்டப்படுகிறது, ஆனால் உண்மையான காதல் உள்ளுணர்வோடு நாம் வைத்து பழகும்போது தான் அதை உணரமுடியும். சிலருக்கு காதல் செய்யும் போது, ஆரம்ப காலத்தை தவிர மற்ற நாட்களில் எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இல்லாமல், போர் அடிப்பது போன்று உணர்வார்கள். சிலருக்கு அதனாலேயே காதல் தோல்வி அடைந்துவிடும். எனவே அந்த மாதிரி காதல் இல்லாமல், எப்போதுமே ரொமான்ஸ் ஆக இருக்க சில டிப்ஸ்...
   
1. காதல் என்பது ஒவ்வொருவரின் மனதைப் பொருத்தது. அதிலும் காதல் சின்னங்களான ரோஜா, மெழுகுவர்த்திகள் மற்றும் சாக்லேட் மட்டுமே இதுவரை காதலில் ஒரு அறிகுறியை கொடுத்துள்ளது. உண்மையில் காதலிப்பரை சந்தோஷப்படுத்துவதற்கு, அவர்களின் உணர்ச்சிகளை தூண்ட எது ஏதுவாயிருக்கும் என்று பாருங்கள். அவர்கள் எதை விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் காதலை வெல்ல அவர்களின் விருப்பங்கள், வெறுப்புகள் அறிந்து கொள்வது மிக அவசியம். காதல் செய்யும் போது, அவர்கள் கண்கள் பூக்கள், புத்தகங்கள் என்று எதன் மேல் படுகிறது, எதை கண்டால் அவர்கள் மனம் சந்தோஷம் கொள்கிறது என்பதை தெரிந்து கொள்வது ஒரு சிறப்பு. மேலும் உங்களது உலகில் மற்றவரை விட அவர்கள் எத்தனை முக்கியமானவர் என்பதை நீங்கள் உணர ஆரம்பிக்கும் பொழுது, உங்கள் மனம் அவர்மீது அதிக கவனத்தை செலுத்தும். இவ்வாறு செலுத்தும் போது, அவர்களது ஒவ்வொரு செயலையிம் ரசிக்கத் தோன்றும்.
happy valentine`s day 

  2. நீங்கள் ஒருவர் மீது ஈர்ப்பு கொண்டு அந்த காதலை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும். மேலும் நீங்கள் அவர்களை கவர என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அவர்மீது ஆர்வம் கொண்டுள்ளீர் என்பதை எப்படி வெளிபடுத்துவது? அவர்களை அன்பால் வெல்ல என்ன செய்ய வேண்டும்? அவர்களை எப்படி பாசாங்கு செய்வது? என்பதை யோசித்தால் அவசியம். அவர்களின் அன்பு மற்றும் காதலை பெற முயற்சிக்கவும். நீங்கள் முன்னமே காதல் தோல்வி அடைந்தவரானால், அந்த தோல்வியைக் வெளப்படுத்திக்கொண்டு சிலர் அனுதாப காதலை உண்டாக்குவர். அப்படி செய்கையில் ஒரு காட்சியை உருவாக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் எத்தனை ஆசை அவர்மீது வைத்திருந்தீர், காதலில் எத்தனை நம்பிக்கை கொண்டிருந்தீர், என்பதை விளக்கும் போது, உங்கள் மீது காதல் கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் பயத்தால் சிலர் தங்களது காதலை சொல்லாமல், காதலில் தோல்வி அடைவர். எனவே அவரவர் காதலை வெளிப்படுத்துவது அவசியம்.
  


  3. காதல் செய்யும் போது ஆரம்பத்தில் எல்லாம் புதியதாக இருக்கும். ஆரம்பத்தில் உங்கள் காதல், உற்சாகத்தை மற்றும் உத்வேகம் கொண்டு, நீண்ட நாள் உறவைத் தொடர நினைக்கும். நீங்கள் ஒருவரை சந்தித்து அவர் மீது காதல் கொண்டு, மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க மனம் ஏங்கும் மற்றும் உங்கள் தொடர்பு நீடிக்க - நாளை என்ன நடக்கும்? அடுத்த வாரம் என்ன நடக்கும்? அடுத்த மாதம் என்ன நடக்கும்? அவர் உங்களை அழைப்பாரா? முத்தமிடுவாரா? அவர் வருவாரா? என்று பல உணர்ச்சிகளும் எதிர்ப்பார்ப்பும் நிகழும். இந்த உறவு உங்கள் வாழ்வில் ஒப்புக்கொண்ட பின், இது ஒரு வழக்கமான ஒன்றாக மாறிவிடும். அதனால் உங்கள் காதல் எப்போதும் புதிதான ஒன்றாக இருக்க வேண்டும் எனில், ஏதாவது புதிதாக செய்யுங்கள். ஆச்சரியப்படும்படி, எதிர்பார்க்கும்படி, அவர்களை என்றும் உற்சாகபடுத்தும் படி, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினால், உங்கள் காதல் எப்போதுமே சிறப்பாக இருக்கும். 

happy valentine`s day
   
 4. காதல் என்பது ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ அல்லது அது ஒன்றும் காசு கொடுத்து வாங்கும் விலை உயர்ந்த பொருளாகவோ அல்லது உயர்தரமானதாக இருக்க வேண்டும் என்பதோ இல்லை. உண்மையில், சில நேரங்களில், காதல் தருணங்கள் எளியதாகவும், மனதில் செய்ய வேண்டுமென்று தோன்றும் ஒரு உணர்வு. அதிலும் சில நேரங்களில் அந்த காதலை வெளிப்படுத்த "நான் உன்னை காதலிக்கிறேன்", "நான் ஒரு அதிர்ஷ்டசாலி" என்றெல்லாம் சொல்லி நம் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். வேண்டுமெனில் காதல் கடிதம் எழுதலாம். இல்லையெனில் அவர்களை மறைந்து நின்று பார்ப்பது, சத்தமாக காதலை சொல்வது, முத்தமிடுவது, கிண்டல் செய்வது, உணர்வை தொடும் வகையில் பேசுவது என்று காதலை வரம்பற்ற வழிகளில் வெளிப்படுத்தலாம். படைப்பாற்றல் மற்றும் வேடிக்கையாக செய்தல் மிகவும் அவர்களை ஈர்க்கும்!
  


  5. வாழ்வில் நீங்கள் விரும்பியவரை பெருமைப்படுத்த அல்லது பாராட்ட, நீங்கள் உண்மையிலேயே அவர்களை உங்களோட இருக்க செய்தல் வேண்டும். அவர்களை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ள, உங்களின் முழு முயற்சி எடுக்கும் பொழுது, அதில் அதிக சந்தோஷம் அடைவீர். நீங்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை தொடர்ந்து பார்க்கும் போது, அதைவிட அற்புதமான சுழல் எதுவும் இல்லை. அவரை உங்களது வாழ்க்கை துணையாக அடைந்து உங்களின் அனைத்து உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள, நீங்கள் எத்தனை அதிர்ஷ்டம் செய்தவர் என்பதை மனமானது ஞாபகப்படுத்தி, மீண்டும் உங்கள் வாழ்க்கையில் காதலை மேலும் அதிகரிக்கச் செய்யும். 


happy valentines day


காதலால் சிலருக்கு
கவிதை பிறக்கும்.
கவிதையால் சிலருக்கு
காதல் பிறக்கும்.

கவிதைக்கு நல்ல
கரு வேண்டும்.
காதலுக்கு நல்ல
தெரிவு வேண்டும்.

மோதலின் பின் காதல்
தொடக்க நிலை.
காதலின் பின் மோதல்
முடிவு நிலை.

வாழ்வைக் காதலி.
ஒருத்தி உன்னையும்
காதலிப்பாள்.
உணர்வுகளுக்கு மதிப்பளி..
உண்மைக் காதல் உதிக்கும்.

கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்
இரண்டும் சேர்ந்தால்
உண்மையில் ஊடல்.

வாழ்தல் என்பது
வரப்பிரசாதம்.
காதல் என்பது
உயிர்ப் பிரவாகம்.

தேடிப் பெறும் காதல்
ஓடி ஒழிக்கும்
நாடி வரும் காதல்
கூடிக் களிக்கும்.

காதல் கரும்பும் அல்ல
காதல் இரும்பும் அல்ல
காதல் மெல்லிய வருடல்.

காதலில் பல ரகம்.
முதலில் உன் ரகத்தை
முடிவு செய்...........

காதலில் காத்திருப்பது
புதிய சுகம்.
காக்க வைப்பது
கடின வலி.

காதலுக்கு எல்லைகள்
கிடையாது. ஆனால்
நீ எல்லைக்குள்
நின்று விடு.
அனுபவம் வளரும்.

  happy valentine`s day

FEB  - 14  Love Advice For Guys 

திறமை- உங்களுக்கு பிடிச்ச பெண்ணுக்கு 1008 நண்பர்கள் facebookல் இருந்தாலும், நீங்க அவங்க மனசுல இடம் பிடிக்கும் திறமை வேண்டும்.


"என்னவளின் அழகைக் கண்டு
என்னவளின் நிழல் கூட
அவளை காதலித்தது
..."

காதலில் தோற்பது எப்படி? யூத் ஸ்பெஷல்

  • முதல்ல போனில் இந்த ம்ம்ம் போடுவதை விடுங்கள். பத்து நிமிடம் எதுவும் பேசலேன்னா “ரொம்ப போர் அடிக்குதா?” கேள்வி வரும், உடனே ஆமான்னு பதில் சொல்லனும்.

  • காலைல Good Morning, ராத்திரி Good Night எஸ்எம்எஸ் அனுப்புவதை நிறுத்துங்கள். நீங்க என்ன டிவி நியூஸ்லையா வேலை பார்க்குறீங்க??? (சில பக்கிகள் Automatic send later செட் பண்ணி அனுப்புறாங்கப்பா, அவ்வ்வ்வ்..)

  • “எதுக்கு இவ்வளோ அழகா இருக்க! உன்னை பார்த்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு” இப்படி எல்லாம் கொஞ்சுவதை நிறுத்துங்கள். “உன் டிரஸ் அழகா இருக்கு, ஆனா அதை நீ போட்டு கெடுத்திட்டே” இப்படி சொல்லிப் பழகுங்கள். (சில நேரங்களில் அடி விழலாம்! என்ன செய்ய தோற்பது என்பது சாதாரண விசயமில்லை!)


  • “ஒன்னே ஒன்னு கொடேன். ப்ளீஸ்!” இப்படியெல்லாம் தப்பித்தவறிக்கூட கேட்டுவிட வேண்டாம். பிறகு பிரிவது கடினம்.

  • தோழிகளுடன் இருக்கும்போது, அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கவும். அவர்களுடனேயே பேசிக்கொண்டிருக்கவும். (யார் கண்டது வருங்காலத்தில் பிக் அப் ஆனாலும் ஆகலாம்!) ஆளுக்கு தன் அழகின்மீதே சந்தேகம் வரும். வரட்டும்! அப்புறம் எப்படி பிரிவது.

  • சும்மா சும்மா பரிசு வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டாம்! கேட்டாலும் கூட நானே உனக்கொரு பரிசு; பிறகெதற்கு இன்னொன்னு என்று சமாளிக்கவும்!

  • எந்த இடத்திற்கும் சொன்ன நேரத்திற்கு போய் அரிச்சந்திரன் என்று நிரூபிக்க வேண்டாம். ஒரு மணி மேரம் கழித்து போகவும் அல்லது போகாமல் தவித்து கடுப்பேற்றவும்.

  • எப்பொழுது தண்ணியடித்தாலும் போனில் கூப்பிட்டு அரை மணிநேரம் அறுக்கவும்! (மீதி நேரமெல்லாம் அவிங்கதானே அறுக்கிராங்க!). “தண்ணியடிசிருக்கியா?” என்றால் ஆம் என பதில் சொல்லவும்.

  • உடன் போகும்போதும் சரி, பேசும்போதும் சரி வழியில் வரும் பெண்களை வர்ணிக்கவும்! அப்புறம் அன்று முழுவதும் ஒரு இம்சையிலிருந்து உங்களுக்கு விடுதலை!

  • அவங்க அம்மா அப்பாவுக்கு ஐஸ் வைப்பதை எல்லாம் விட்டுவிடவும். அவிங்க அப்பனை பார்த்த உடனே தம்மை கீழே போட்டுவிட்டு நல்லவன் மாதிரியெல்லாம் நடிக்க வேண்டாம். பார்க்கும் போதுதான் புகையை ஊத வேண்டும். கண்டிப்பாய் நம் ஆளிடம் சொல்வான்(ர்), “இதுக எல்லாம் எப்படி உருப்படப் போகுதோ!” (ர் – அதான் பிரிய போறோமே பிறகெதற்கு மரியாதை?)

  • பிறந்த நாளுக்கு இரவு 12 வரை கண்விழித்திருந்து ஹாப்பி பர்த்டே சொல்லுவதையெல்லாம் விட்டுவிடவும். மதியம் கூப்பிட்டு “உனக்கு இன்னிக்கு பிறந்த நாளில்ல! மறந்தே போய்விட்டேன்! ஹாப்பி பர்த்டே!” பிறகு நீங்கள் பிரிவதற்கு முயற்சியே செய்ய வேண்டியதில்லை.

  • இதை மட்டும் சொல்லுங்க “உன்னைப் போய் நான் ஹே ஹே ஹே” அம்புட்டுதேன்! முடிந்தது வேலை! (இது என்னோட Favourite)
  • Green Grass Love Heart

 "அழ வைத்துப் பார்க்கிறாய்
தினம் தினம்…..
இரக்கப்படுவாய் என எண்ணி
ஏங்கித் தவித்த என் மனம்
கல்லறைதேடி அலைகிறது..
கடைசியில் உனக்காக எழுதும் கவி இது
சொல்லத் தெரியாத என் காதல்
மெல்ல விடைபெறுகிறது.. கண்ணீரோடு
…"

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் Video

 

காதலி உண்மையானவளா? காதலன் நல்லவனா?

உருகி உருகி காதலை வெளிப்படுத்தி விட்டு உறவுக்குப் பிறகு வேறு பெண்ணைத் தேடிச் செல்லும் ஆண்களும் இருக்கிறார்கள். பீச், பார்க், தியேட்டர் என்று சுற்றி உல்லாசமாக இருந்துவிட்டு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைகளை கட்டிக் கொண்டு காதலுக்கு டாட்டா காட்டும் பெண்களும் இருக்கிறார்கள்.

காதலில் இப்படி இடைïறுகளை சந்திக்காமல் இருக்க என்ன வழி? உண்மையான காதலை கண்டு பிடிப்பது எப்படி? 

அதற்கு சில எளிய வழிகள்..

நீ இல்லாம என்னால வாழவே முடியாது. நீ தான் என் உயிர் என்று டயலாக் விடுபவர்களிடம் உஷாராக இருங்கள். அதிகமாக உணர்ச்சிவசப்படுவது ஈர்ப்பின் அறிகுறி தான் புரிதலுடன் பழகியபின் வருவதே காதல்.

காதலிப்பவர் கொடுக்கும் தகவல்கள் உண்மையானதா என்பதை வைத்து அவரது காதலையும் உண்மையா? இல்லையா? என்று அறியலாம். வேலை பார்க்கும் இடம் வீட்டு முகவரியை சொல்லாதவர்களும் தவறான தகவல் தருபவர்களும் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருப்பார்கள்.

உங்கள் காதலர் நண்பர்கள் தோழிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறாரா? என்று பாருங்கள். அதுபோல நீங்களும் அவரை உங்கள் தோழிகளுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். பிறருக்குத் தெரிந்து காதல் செய்வது ஒருவிதத்தில் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும். அதிக அளவிலான ஏமாற்றத்தையும் தடுக்கும்.

அதேபோல அவரோடு நீங்கள் பழகுவது உங்கள் வீட்டிற்கு பட்டும் படாமலும் தெரிந்திருந்தால் இன்னும் நல்லது. பெற்றோரும் அவரைப் பற்றிய விஷயங்களில் உஷார்' காட்டுவார்கள்.

காதலர் உரிமையுடன் உங்களிடம் கோபப்படுகிறாரா? திட்டுகிறாரா? சில நேரங்களில் கைநீட்டி அடிக்கவும் செய்கிறாரா? அவை உரிமை எடுத்துக் கொண்டு செய்யும் காரியமாக மட்டும் எண்ணிவிடாதீர்கள். உங்கள் மீதுள்ள நம்பிக்கைக் குறைவும், தன்னம்பிக்கை இல்லாததன் வெளிப்பாடும் கூட இம்மாதிரி கோபமாக வெளிப்படும். இதுபோன்ற குணம் உடையவர்களுடன் நீண்டகாலம் சேர்ந்து வாழ முடியாது. எனவே கோபத்தின் காரணத்தையும், அவரது நடவடிக்கைகளையும் கவனமாக கவனியுங்கள்.

நாம தான் ஒருவருக்கொருவர் புரிஞ்சிக்கிட்டோமே தொட்டுப் பேசக்கூடாதா?' என்று பீடிகை போடுவதும் உறவை வற்புறுத்துவதும் உண்மையான காதலாக இருக்க முடியாது. எல்லை மீறாத காதல் நூலிழை இடைவெளியில் தான் இருக்கிறது.

மேற்கண்ட விஷயங்களை வைத்து உண்மையான காதலை கண்டு பிடிக்கலாம். அவரது அன்பு உண்மையானாலும் அவர் உங்களுக்கு சரியான துணைவரா? என்பதை முடிவு செய்ய இன்னும் யோசிக்க வேண்டும். 

happy valentine`s day

அதற்கான சில விஷயங்கள்...
  • தன்னையே சுற்றிச் சுற்றி வந்தார் என்பதற்காக காதலை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
  • நீ குழந்தை மாதிரி நடந்துக்கிறது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிற காதலர் திருமணத்துக்குப் பிறகு நமக்கு திருமணம் ஆகி விட்டது கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோ குழந்தை மாதிரி நடந்துக்காதேன்னு திட்டினால் வெறுப்பு விளையும். எனவே பொடி வைத்துப் பேசினாலும் மயக்கத்தில் வீழாதீர்கள்.
  • நான் உனக்காக எது எதையெல்லாம் விட்டுக்கொடுத்தேன் நீ எனக்கு இதைக்கூட செய்யமாட்டியா இந்த தப்பை பொறுத்துக்க மாட்டியா? என்று உணர்ச்சி பொங்க பேசுபவரும் கெஞ்சுபவரும் சரியான நபரல்ல. 
  • நீ தானே என்ன பிடிச்சிருக்குன்னு சொன்னே நான் இப்படித்தான் இருப்பேன் அட்ஜஸ்ட் பண்ண முடிஞ்சா ஓகே என்று கண்டிஷன் போடும் பெண்ணும் சரியல்ல அன்பும் விட்டுக்கொடுத்தலும் இயல்பாக நிகழ வேண்டும்.
  • வேலையில் இருக்கும் பெண் தனக்கு நிகரான பணியில் இருப்பவரையோ, இணையாக சம்பாதிப்பவரையோ திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் இருவரும் ஒருபோதும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்ப்பவராகவோ தொழிலை ஒப்பிட்டுப் பேசி வாக்குவாதம் செய்பவராகவோ இருந்தால் காதல் அம்பேல்.
  • அதுபோலத்தான் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் காதலித்தால் ஒருவர் மற்றவர் மதத்தையோ நம்பிக்கையையோ விளையாட்டாகக்கூட கேலி செய்யக்கூடாது. உங்கள் காதலர் அப்படிப்பட்டவர் என்றால் ஓ.கே.
  • ஒருவேளை நல்லவர் என்று நம்பி பழகியபின்பு உங்கள் காதலர் மோசமானவர் என்று தெரிந்தால் தயங்காமல் அவரை விட்டு விலக வேண்டும். அதுதான் தெளிவான முடிவு! `இல்லை, நான் அவரை நம்புகிறேன், அவரை மாற்றிக் காட்டுவேன், என்னால் அவரை மறக்க முடியாது என்று பிடிவாதம் காட்டுவது உங்களை இழப்புகளில் இட்டுச் செல்லும்.
  • பள்ளி கல்லூரியில் தொடங்கும் காதல் பெரும்பாலும் வாழ்க்கை முழுவதும் வருவதில்லை. இதற்குள்ளாக உறவில் கலந்து விடுபவர்கள் வாழ்க்கையில் மோசமான விளைவுகளை சந்திக்கிறார்கள்.

எனவே பக்குவப்பட்ட வயதுக்குப் பிறகு தனது ஆசையை விருப்பப்பட்டவரிடம் தெரிவிப்பவரையும் உறவுக்குள் நுழையாமல் திருமணத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பவரையும் வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்யுங்கள். காதல் மாதிரியே வாழ்க்கையும் இனிக்கும்.

happy valentines day



இந்த பொண்ணுங்களே இப்படித்தான்


 


காதல் இன்று பொழுதுபோக்கே!

காதலில் ஆண்கள்தான் ஏமாற்றுகிறார்கள் என்று பெண்கள் குமுறிய காலம் மாறிவிட்டது. ஏமாற்றும் பெண்களும் இருக்கிறார்கள்' என்பதை இன்றைய இளைஞிகளே ஒப்புக் கொள்கிறார்கள்.

காதல் இன்று எப்படி இருக்கிறது பெண்கள் காதலை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி கல்லூரி மாணவிகள் சிலரது கருத்து:
  • இன்றைய காதல் 90 சதவீதம் பொழுதுபோக்காகவே இருக்கிறது.
  • பெண்களை எளிதில் மயக்கிவிடுவது ஆண்களின் வர்ணனை தான். நீ ரொம்ப அழகா இருக்கே'' என்று சொல்லிவிட்டால் பெண்ணிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அப்படிச் சொல்லியவரை பெண் காதலராக தேர்வு செய்யாவிட்டாலும் பல நேரங்களில் அவர் சொல்லியதை தன் தோழிகளிடம் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள் பெண்கள்.
  • பல ஆண்களைப் போன்று பெண்களும் பழகி விட்டு பிரிந்து விடுவதை விரும்புகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் பெண்கள் பெற்றோர் கண்காணிப்பைத் தாண்டி சென்னை போன்ற நகர்ப்புறங்களில் குடியேறி படிப்பதும் வேலை செய்வதும் தான். அவர்கள், தங்களை விரும்பி வரும் ஆண்களை பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள்.
  • காதலர் தினமென்றால் காதலருடன் ஜாலியாக பொழுதுபோக்கும் நாள் என்று எண்ணும் பெண்களும் ஏராளம். `பப்' பார்ட்டிக்குச் சென்று நடனம் ஆடுவதை காதலர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். மேல்தட்டு மக்களின் பழக்கமான பப் பார்ட்டி இன்றைய காதலர்களுக்கும் இனிக்கிறது.
  • ஆண்கள் இப்போது காதலைச் சொல்வதற்கு ரோஜா கொடுப்பதில்லை. எஸ்.எம்.எஸ்.களில் தான் இன்றைய காதல் வளர்கிறது. அத்துடன் தோழிகளிடம் விசாரித்து காதலிக்கு என்ன கலர் பிடிக்கும் என்ன உணவு பிடிக்கும் என்ன கிப்ட் பிடிக்கும் என்பதை தெரிந்து திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து கவர்ந்து விடுவதை நிறைய ஆண்கள் தங்கள் பாணியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
  • பெண்கள் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டும் காதலிப்பதில்லை என்றும் கல்லூரி மாணவிகள் சொல்கிறார்கள். இது அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. தன்னைச் சுற்றும் ஆண்களில் நாலைந்து பேரை அவர்களும் கணக்கு பண்ணுகிறார்கள். அதில் பெஸ்ட்டாகத் தோன்றும் ஒருவரை நேசிக்கத் தொடங்குகிறார்கள். அவரிடம் வசதிக்குறைவு தெரிந்தால் இரண்டாம் நபரை தேர்வு செய்யும் வகையிலேயே பழக்கத்தில் வைத்திருப்பார்கள். இருந்தாலும் திருமணத்துடன் இந்த ஆண் நண்பர்களை கைகழுவி விடுகிறார்கள் பெண்கள்.

காதலும் பெண்களின் சிந்தனையும் இன்று ரொம்பத்தான் மாறியிருக்கிறது இல்லையா !!

 

"என் வாழ்வில் வந்த தேவதை நீ
என்னை வாழவைத்தவள் நீ
என்னை சந்தோசமடைய வைத்தவள் நீ
என்னை மாற்றமடைய வைத்தவள் நீ-இறுதியில்
என்னை கண்கலங்க வைத்தவள் நீ-இறுதியில்
என்னை நடுவீதியில் தவிக்க விட்டு
சென்றதும் ஏனோ
இப்போ என்னை ஒரு நடை பிணமாய் ஆகியதும் ஏனோ பெண்ணே
..............??????"



Neeya Naana Lover vs Parents Video


உன்னோடு ஒரு வாழ்க்கை...! 

" வான்வெளி நட்சத்திரங்களாய்
நம் இருவருக்கிடையிலும் ஒரு துல்லிய இடைவெளி...
தூரத்தில் எட்ட நின்றே அங்கு காட்சியாகிறது
நமக்குள் ஒரு காதல் நாடகம்...!

என் நிழலின் அசைவை கண்களால் கணிக்கும் நீ
ஏனோ உன்னை நான் நோக்கும் பொழுதெல்லாம்
பார்வைகளின் சங்கமத்தை தவிர்த்துச் செல்கிறாய்...!

உனக்கும் எனக்கும் அப்படி என்னதான் பந்தம்?
என் கனவுகளில் இம்சித்துக் கொல்லும் உன்னை
அணுஅணுவாய் துடிக்க விட ஆசை...!

மொத்தமாய் உன் காதலை பருகிதான் பார்ப்போமென
துணிந்து உன்னை நெருங்குகிறேன் நான்...!

என்னை பின்தொடரும்
உன் பார்வை வீச்சுகளில் இருந்து தப்பித்து
ஓடி ஒளிந்து கொண்டு
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறேன்...!

உன் கண்களின் சிறைக்குள்
அடைபடாமல் தப்பிக்கும்
சாகச கைதியாய் நான்...
என்னை காணாமல் நீ தவிக்கும் தவிப்பு
இன்னும் எனக்குள் பரவசம் ஊட்டிச் செல்கிறது...!

நீ கண்மூடி கிடக்கும் பொழுதெல்லாம்
வெண்துகில் கொண்டு உன் வேர்வை துடைக்கிறேன்...
பரவசபார்வை ஒன்றை நீ உதிர்க்கும் போதோ
போலியாய் கோபம் கொண்டு உதடு சுழித்துக்கொள்கிறேன்...!

இன்னும் என்ன தயக்கம்,
வா...! என் விரல்கள் கோர்த்து விடு என்று
என்னை இழுத்துக்கொண்டு
நம் வசந்தத்தின் வாசல் திறக்கிறாய் நீ...!

இங்கே கொட்டிக்கிடக்குறது
எனக்கான சுவர்க்க பூமி...
ஹஹா இல்லையில்லை நமக்கான சுவர்க்க பூமி...!

வெள்ளி அருவியின் முத்துச் சிதறல்
என் அங்கமெங்கும் முத்தமிட்டுச் செல்கிறது...
பொங்கும் என் மனமோ நீரலைகளை
அள்ளி அள்ளி ஆலிங்கனம் செய்து களிக்கிறது...!

என் காலில் நீ அணிந்த மெட்டியோ
உன் உயிரை என் உயிரோடு
சேர்த்து வைத்து தேய்க்கிறது...!
ஏக்கப்பார்வை பார்க்கும் கொலுசோ
கலகலவென நம் காதலை
இந்த பிரபஞ்சம் முழுதும் பறைசாற்றிச் செல்கிறது...!

கொஞ்சும் கிளியொன்றை
கண்களுக்குள் காட்டியே தீரவேண்டுமென்று
அடம் பிடிக்கிறேன் நான்....
உன் கொள்ளை அழகின் முன்
அது அரூபமாய் போனதென்று
அழகாய் பொய்யுரைக்கிறாய் நீ...!

உன் செந்தாமரை பாதங்களின் தீண்டல்களால்
இன்று நிலமகளும் மோட்சம் அடைகிறாள்...
தயவு செய்து வெட்கம் சிந்தாதே...
அதோ... உச்சி வெயிலிலே கீழ்வானம் சிவந்து விட போகிறது
என்று ஏதேதோ உளறுகிறாய்...!

அத்தனையும் ரசிக்கிறேன் நான்...
கண்மூடி லயித்திருக்கும் உன் கற்பனைக்குள் புகுந்தபடி...!
வாழ்ந்து தான் பார்க்க வேண்டும்
உன்னோடு அப்படி ஒரு வாழ்க்கை...!

இரவின் கரங்களுக்குள் நான்
மெல்ல மெல்ல உறங்கியே போகிறேன்
மீண்டும் விடியும்... நீயும் காதலிப்பாய் என்ற நம்பிக்கையோடு
...! "

 

 

"பூத்துக் குலுங்கும்
மலர்களை விட...
வாடிய மலர்களையே...!
நான்...
அதிகம் நேசிக்கிறேன்!

ஆம்.
அது அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்த மலர்கள்
"

 

உன்னோடு சேரும் ஒருநேரமே,,,,,
"என்னடி எழுதுவது உனக்காய்
எழுதச் சொல்லுகிறாய்,,,
உன்னோடு பேச நினைத்த பொழுதே
என்னுள் ஒளிந்திருக்கும் ஆழ்மனமூச்சு
ஒரு சுவாச பரிணாமம் அல்லவா நடத்திவிடுகிறது,,,

என் இதயக்குழலோடு மோதிவிட்ட
இரத்த நாளங்களின் அர்த்த நடமாட்டம்
சிலநொடி சிறைப்பட்டு பின்பு சில்லென
குளிரூட்டி மீண்டும் நிகழ்வுக்கு வருகிறது

உன்னோடு இணைந்திருக்கப்போகும்
நாட்களை கணக்கிட்டு ,,இருந்த நாட்களை
இறந்தகால நாட்களாக நினைத்துவிட
இணையில்லா ஒரு இறுதி போர்களம்
வேண்டுமாய் வன்முறை செய்கிறது
என் ஆகாவடி ஆசைக்கொந்தளிப்புகள்

இன்று போய் நாளை வா என்பதை போல
இரவுத்தூக்கம் தொலைத்து,,,,, தானே
இன்பம் தேடிக் கொள்ளுகிறது இவனின்
இலையுதிர்கால இளமை எதிர்காணுதல்கள்

இனியும் வேண்டுமா இப்படியொரு பிறவி
என்பதை போல் மோகப்புன்னகை புரிகிறாய்,,,
காணத்தவிக்கும் என் விழிகளோ உன்னிலிருந்து
வெகு தூரத்தில் நின்று வெறும் வெட்டிக்
கனவுகளுக்கு இரையாகிறது

வெறுமனே விளையாடுகிறாய்
ஏன் இத்தனை புலம்பல்கள் என்னிடம் என்று
ஒரு ஏகாந்த பார்வையை என்மீது வீசி ,,,
என் எண்ணங்களை புரிந்தவளாய் இருந்தும்,,,

ஒப்பில்லாத ஒரு வார்த்தை உரைத்தாய்,,,
இத்தனை செயல்களையும் எத்தனை பேரோடு
இதுவரை எத்தனித்திருக்கிறாய் அதில் நான்
எத்தனை பேரில் ஒருவள் என்று,,,

என் வார்த்தைகள் தப்பிவிட
எதிர் விடையில்லாத உன்சில
தாக்குதல் அனர்த்தங்களுக்கு
விளக்கங்களை தேடுகிறேன்,,,அக்கணம்

இனியும் உன்னில் என் வாக்குறுதிகள்
செல்லுபடியில்லை என்பதை நன்கு
யூகித்துணர்ந்தவனாய் இருந்தும் உன்
நினைவுத்தீயினுள் தள்ளப்படுகிறேன்,,,
மறுபடியும் என்னை நிரூபித்துவிட
நினைத்து,,,,,

எப்படியேனும் உனக்காய் மட்டுமே
என் மீதிநாள் வாழ்க்கை என உறுதி
செய்துவிட எண்ணி,,,,சந்தர்பங்களை
அலசுகிறேன் இங்கொருபுறமாய்

உன்னிடம் ஒரு விடயம் உரைத்துவிட
உண்ணாமல் கொள்ளாமல் உன் போக்கிடம்
பார்த்து செப்பனே கிடந்திருந்தேன் ,,,

அதோ அங்கே என் கண்பட தேவதையாய்
உன் தோழிகளோடு கைக்கோர்த்து
நீ நடந்து வர கண்ட என் தவிப்புகளோ
என்னை உன்னில் ஒரு கோமாளியாய்
காட்சியளிக்க வாய்விட்டு சிரிகிறாய் ,,
நானோ சொல்வதறியாமல் திகைக்கிறேன்

மூஞ்சியைப்பாரு பெரிய மன்மதன் "ன்னு"
நெனப்பு என்று ஏளனப்புன்னகையை
வெறுப்போடு எல்லார் முன்னிலும் உமிழ்ந்தாய் ,,,

தெரியவில்லை உன்னில் மட்டும் நான் ஏன்
பிடித்திறாமல் போயிருந்தேன் என்று,,,

யாரையும் மனதால் ஆட்கொண்டுவிடும் துளி
எண்ணங்கள் கூட இல்லாத இவனும் ஒரு
மன்மதனே,,,அந்தந்த காலக்கட்டங்களில்,,,

கோணிப் பைய்யிலே நிரப்பிய
பயன்படுத்தப்படாத பழையப் புத்தகங்களாய்
புதையுண்ட இவனின் வாழ்க்கை
விதையிடப்படாத காலம் தப்பிய
ஒரு அழகிய பூச்செடியின் அந்திமகால
ஆசைகளாய் மட்டுமே இதுவரை
இருந்திருப்பதை ஏற்றுக்கொண்டவனாய்
இன்று உணர்கிறேன் உன்னால்,,

எத்தனையோ அவமானங்களுக்கு பிறகு
என்னிடம் இருந்து உன் நினைவுகளுக்கு
விடுதலை அளித்தவனாய் இருந்த பொழுதும்
தேடிவந்து என்னை உபத்திரவிக்கிறாய்

ஏனடி என் பின்னால் இப்படியொரு
தொடர் விளையாட்டென்று கேட்டால்
அப்படியே என்னை கழுத்தோடு
அணைத்துக்கொண்டு ஐந்து வயது
குழந்தையாய் மாறி அழகாய் கெஞ்சுகிறாய்,,,,
எள்ளளவு உன் சமயத்தை போக்கிவிடும்
இவனொரு உயிருள்ள பொழுதுபோக்கு
பொம்மையென்று
,,,,"

happy valentines day

 

 

 Check Your Love Strength  Click  "Love Meter"


"Love is peaceful, love is fine
Every second, so intertwine
Time so precious, time so serene
Goes by so fast, love at fifteen
Heartbreak, relentless pain
Don’t think I could ever love again.
Only time, only mind, only new love
Can truly mend a broken heart."


 "It’s not easy to fight your feelings, if you are in love you go crazy."

by

     Aswin Gandhi