Sunday 7 July 2013

Mini News For U

**********************************************    
"News  Any Time On Your LiTTle Screen"
**********************************************   


 
7/7/2013 12.30pm

விஸ்வரூபம்-2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார் கமல்..




  • கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் விஸ்வரூபம். மாபெரும் வெற்றி பெற்ற அந்த படத்தை அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளை களமாக வைத்து கதை பண்ணியிருந்தார் கமல். ஆனால், இப்போது இரண்டாவது பாகத்தை முழுக்க முழுக்க இந்தியாவில் நடப்பது போல் படமாக்கியிருக்கிறார். சில டெக்னீஷியன்கள் மட்டுமே மாற்றப்பட்ட நிலையில், முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்-நடிகையரே இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளனர்.

  • மேலும், இதுவரை இரண்டாம் பாகம் பற்றிய எந்த தகவல்களையும் வெளியிடாமல் இருந்த கமல், இப்போது தமிழ் மற்றும் இந்தி போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், விஸ்வரூபம் முதல் பாகம் சர்ச்சைகளை கிளப்பியதால், இரண்டாம் பாகத்தில் என்ன விசயத்தை படமாக்கியிருக்கிறாரோ என்று பலரும் போஸ்டரை உற்று நோக்கத் தொடங்கியுள்ளனர்.

விஸ்வரூபம்-2 - தீபாவளிக்கு ரிலீஸ்?!

  • விஸ்வரூபம் வெற்றியை தொடர்ந்து, கமல் இயக்கி, நடித்து வரும் விஸ்வரூபம்-2 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. பல்வேறு தடைகளை கடந்து கமலின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த படம் விஸ்வரூபம். இப்படம் முடியும்போதே அதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் தொடரும் என சொல்லியிருந்தார் கமல். அதன்படி விஸ்வரூபம்-2 பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. கமலே இயக்கி, நடித்து வரும் இப்படத்தில் முதல்பாகத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட நடிகர்-நடிகையரே இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். 

  • இப்படத்தின் ஷூட்டிங்கை தற்போது தாய்லாந்தில் முகாமிட்டு படமாக்கி வருகிறார் கமல். தாய்லாந்தை தொடர்ந்து பாங்காக்கிலும், இறுதிகட்ட படப்பிடிப்புகள் டில்லியிலும் நடைபெற இருக்கிறது. அதனைத்த‌ொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெறுகிறது. இறுதியாக படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////





No comments:

Post a Comment